திருப்புக்கொளியூர் அவிநாசி - Tiruppur

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : அவிநாசியப்பர், பெருங்கேடிலியப்பர்
இறைவிபெயர் : பெருங்கருணைநாயகி
தீர்த்தம் : காசிக்கிணறு, நாகக்கன்னி தீர்த்தம், தெப்பக்குளம், தாமரைக்குளம் , திருநள்ளாறு, ஐராவதத்துறை
தல விருட்சம் : பாதிரி (தல புராணத்தின்படி மாமரம்)

 இருப்பிடம்

திருப்புக்கொளியூர் அவிநாசி
அவிநாசி , Tiruppur, Tamil Nadu,
India -

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
பதிகம் :

கொங்குநாடு


 ஸ்தல வரலாறு

அவிநாசி என்றால் பெரிய தீமையை அழிக்கவல்லது. சுந்தரர் இவ்வூருக்கு வந்த காலத்தில், ஊர் திருப்புக்கொளியூர் என்றும்,கோயில் அவிநாசி என்றும் அழைக்கப்பட்டதாம். சிவபெருமான் அக்கினித் தாண்டவம் ஆடிய ஊழிக்காலத்தில், இந்திரனும், பிரம்மாவும், திருமாலும், தேவர்களும் புகுந்து ஒளிந்து கொண்ட ஊர். அவர்களுக்கு சங்கார இருட்டின் பயம் நீங்கி ஒளி தோன்றியதால் புக்கொளியூர் எனப் பெயர் பெற்றது. சுந்தரர் இவ்வழியாக வந்த பொழுது எதிரெதிர் வீடுகளில் ஒரு வீட்டில் மங்கல ஒலியும் மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் கேட்க காரணத்தை வினவுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தாமரைக் குளத்தில் விளையாடச் சென்ற இரு வீட்டு பாலகர்களில் ஒரு பாலகனை முதலை விழுங்கியது.உயிரோடு இருப்பவனுக்கு உபநயனம் நடக்க, இறந்தவனின் பெற்றோரோ தமது பிள்ளையும் இருந்திருந்தால் இப்பொழுது உபநயனம் செய்திருக்கலாம் என்று எண்ணி வருந்துவதை அறிந்தார். சுந்தரர் எழுந்தருளியிருப்பதை அறிந்த அப்பெற்றோர் தங்களின் துயரத்தை மறந்து தம்பிரான் தோழரைத் தரிசிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அவரைப் பணிந்தனர். இறைவன் அடியார்பால் அவர்கள் கொண்ட அன்பினைக் கண்ட சுந்தரர், இவர்களின் மகனை மீட்ட பின்பே திருக்கோயிலுக்குள் செல்வேன் என்று எண்ணி தாமரைக்குளத்திற்குச் சென்றார். "எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே" என்னும் திருப்பதிகம் அருளிச் செய்து அப்பாலகனை மூன்று ஆண்டுகளின் வளர்ச்சி சற்றும் குறையாமல் வரவழைத்து அவிநாசியப்பர் சந்நிதியிலேயே உபநயனமும் செய்து அருளினார். இத்தாமரைக்குளம், கோயிலுக்கு தெற்கில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.அருகில் சுந்தரருக்குத் தனிக்கோயிலும் உண்டு.


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி