பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மூன்று உள குற்றம் முழுது நலிவன மான்று இருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றின் உள் பட்டு முடிகின்ற வாறே.
காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து ஏமம் பிடித்து இருந் தேனுக்கு எறி மணி ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர் தாமம் அதனைத் தலைப் பட்டவாறே.