பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எங்கும் திருமேனி எங்கும் சிவ சத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திரு நட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கு எங்கும் தங்கும் சிவன் அருள் தன் விளையாட்டு அதே.
சிற்பரம் சோதி சிவ ஆனந்தக் கூத்தனைச் சொல் பதம் ஆம் அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொன் பதிக் கூத்தனைப் பொன் தில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார் அறிவாரே.