பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஆதியை வேதத்தின் அப் பொருளானைச் சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பராசத்தியோடு உடன் நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே.
தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை காமம் களவு கொலை எனக் காண்பவை நேமி ஈர் ஐந்து நியமத்தன் ஆமே.
தவம் செபம் சந்தோடம் ஆத்திகம் தானம் சிவன் தன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே.