பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே, கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா, வெண் நீறு ஆடீ, ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே, அடியேன், நின் பூம் கழல்கள் அவை அல்லாது, எவை யாதும் புகழேனே!
சடையானே, தழல் ஆடீ, தயங்கு மூ இலைச் சூலப் படையானே, பரஞ்சோதீ, பசுபதீ, மழ வெள்ளை விடையானே, விரி பொழில் சூழ் பெருந்துறையாய், அடியேன் நான், உடையானே, உனை அல்லாது, உறு துணை மற்று அறியேனே!
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்; கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே, கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!