பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்; மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்; ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்; வான ஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே.
தொண்டர்காள், தூசி செல்லீர்; பத்தர்காள், சூழப் போகீர்; ஒண் திறல் யோகிகளே, பேர் அணி உந்தீர்கள்; திண் திறல் சித்தர்களே, கடைக் கூழை செல்மின்கள்; அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல் படை வாராமே.