பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும், கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக் கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே! உண்டாமோ கைம்மாறு? உரை.
உள்ள மலம் மூன்றும் மாய, உகு பெரும் தேன் வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த, வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்; வாழ்த்த, கருவும் கெடும், பிறவிக் காடு.
காட்டகத்து வேடன்; கடலில் வலை வாணன்; நாட்டில் பரிப் பாகன்; நம் வினையை வீட்டி, அருளும் பெருந்துறையான்; அம் கமல பாதம், மருளும் கெட, நெஞ்சே! வாழ்த்து.
வாழ்ந்தார்கள் ஆவாரும், வல் வினையை மாய்ப்பாரும், தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் சூழ்ந்து அமரர் சென்று, இறைஞ்சி, ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை நன்று இறைஞ்சி, ஏத்தும் நமர்.
நண்ணிப் பெருந்துறையை, நம் இடர்கள் போய் அகல, எண்ணி எழு கோகழிக்கு அரசை, பண்ணின் மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னிக் கழியாது இருந்தவனை, காண்.
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என, பேணும் அடியார் பிறப்பு அகல, காணும் பெரியானை, நெஞ்சே! பெருந்துறையில் என்றும் பிரியானை, வாய் ஆரப் பேசு.
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய், பேச்சு இறந்த மாசு இல் மணியின் மணி வார்த்தை பேசி, பெருந்துறையே என்று, பிறப்பு அறுத்தேன் நல்ல மருந்தின் அடி என் மனத்தே வைத்து.