முதல் திருமுறை

தேவாரம்
திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள்
1469 பாடல்கள்
88 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை
கோவில்: காழி - சீர்காழி

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொருள்

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

குரலிசை

குரலிசை: 1. தருமபுரம் ப. சுவாமிநாதன், உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041 2. எம். எம். தண்டபாணி தேசிகர், தமிழ்நாடு

காணொளி

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள் இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

கருத்துக்கள்

  • மணிகண்டன்
    18 நவம்பர், 2018

    நன்றிகள் தொடரட்டும் தங்கள் கருத்துக்கள் மற்றும் சமூதாய சிந்தனைகளுடன் கூடிய உரையாடல்கள்.

    பதில்
  • முத்துகுமார்
    17 நவம்பர், 2018

    தங்கள் கருத்துக்கள் மற்றும் சமூதாய சிந்தனைகளுடன் கூடிய உரையாடல்கள்.

    பதில்

தங்கள் கருத்து