பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை; புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே
வீதிபோக்கு ஆவன; வினையை வீட்டு(வ்)வன; ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன தீது இல் தேவன்குடித் தேவர் தேவு, எய்திய ஆதி அந்தம்(ம்) இலா அடிகள், வேடங்களே
மானம் ஆக்கு(வ்)வன, மாசு நீக்கு(வ்)வன; வானை உள்கச் செலும் வழிகள் காட்டு(வ்)வன தேனும் வண்டும்(ம்) இசை பாடும் தேவன்கு ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே
செவிகள் ஆர்விப்பன; சிந்தையுள் சேர்வன; கவிகள் பாடு(வ்)வன; கண் குளிர்விப்பன புவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே
விண் உலாவும் நெறி; வீடு காட்டும் நெறி; மண் உலாவும் நெறி; மயக்கம் தீர்க்கும் நெறி தெண் நிலா வெண்மதி தீண்டு தேவன்கு அண்ணல், ஆன் ஏறு உடை அடிகள், வேடங்களே
பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா, புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும் திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்கு அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே
கரைதல் ஒன்றும்(ம்) இலை, கருத வல்லார்தமக்கு உரைவில் ஊனம்(ம்) இலை; உலகினில் மன்னுவர் திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்கு அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே
துளக்கம் இல்லாதன; தூய தோற்றத்தன; விளக்கம் ஆக்கு(வ்)வன வெறி வண்டு ஆரும் பொழில் திளைக்கும் தேவன்குடி, திசைமுகனோடு மால் அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே
செரு மருதம் துவர்த் தேர், அமண் ஆதர்கள் உரு மருவப்படாத் தொழும்பர்தம் உரை கொளேல்! திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்கு அருமருந்து ஆவன, அடிகள் வேடங்களே!
சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை, மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்- நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.