பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள் நூல் அது வேத அந்தம் நுண் சிகை ஞானம் ஆம் பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர் ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாம் ஆகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரம் ஆன திருவடி சேர்வரே.
அரசுடன் ஆலத்தி ஆகும் அக்காரம் விரவு கனலில் வியன் உரு மாறி நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர் உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே.