பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தத்துவம் ஆறு ஆறு தன் மனு ஏழ்கோடி மெய்த்தகு அன்னம் ஐம் பான் ஒன்று மேதினி ஒத்து இரு நூற்று இருபான் நான்கு என்பான் ஒன்று வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே.
நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து ஓடும் அவரோடு உள் இருபத்து அஞ்சும் கூடுவர் கூடிக் குறிவழியே சென்று தேடிய பின்னர்த் திகைத்து இருந்தார்களே.
சாக்கிர சாக்கிரம் ஆதித் தலை ஆக்கி ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்துத் தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே.