பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பெறு பகிரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல் அளவு ஆகப் பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கிச் செறியும் அண்டா சனத் தேவர் பிரானே.
ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின் மேல் மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்து ஆறாய்த் தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே.