பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
செற்றிடும் சீவ உபாதித் திறன் ஏழும் பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை உற்றிடும் காரிய காரணத் தோடு அற அற்றிட அச்சிவம் ஆகும் அணுவனே.
ஆறு ஆறு காரியோ பாதி அகன்றிட்டு வேறு ஆய் நனவு மிகுத்த கனா நனா ஆறா அகன்ற சுழுத்தி அதில் எய்தாப் பேறா நிலத்து உயிர் தொம் பதம் பேசிலே.
உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று அயிர்ப்பு அறு காரணோ பாதி விதிரேகத்து உயிர்ப்பு உறும் ஈசன் உபமிதத்தால் அன்றி வியர்ப்பு உறும் ஆணவம் வீடல் செய்யாவே.
காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு காரணம் ஏழில் கலக்கும் பரசிவன் காரிய காரணம் கற்பனை சொல் பதம் பார் அறும் பாழில் பரா பரத் தானே.
முத்திக்கு வித்து முதல்வன் தன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்து உற்றுப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தான் ஆதல் சத்திக்கு வித்துத் தனது உப சாந்தமே.