பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சிந்தை அது என்னச் சிவன் என்ன வேறு இல்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளிய வல்லார் கட்குச் சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.
வாக்கும் மனமும் மறைந்த மறைப் பொருள் நோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே.
பரனாய்ப் பராபரன் ஆகி அப்பால் சென்று உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்த் தரனாய் தனாது எனவாறு அறி ஒண்ணா அரனாய் உலகில் அருள் புரிந்தானே.