பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன் தன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே.
கொலையே களவுகள் காமம் பொய் கூறல் மலைவான பாதகம் ஆம் அவை நீக்கித் தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு இலையாம் இவை ஞான ஆனந்தத்து இருத்தலே.
கொன்றிலாரைக் கொலச் சொலிக் கூறினார் தின்றிலாரைத் தினச் சொலித் தெண்டித்தார் பன்றியாப் படியில் பிறந்து ஏழ் நரகு ஒன்றிவார் அரன் ஆணையிது உண்மையே.