பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
திலம் அத்தனையே சிவ ஞானிக்கு ஈந்தால் பல முத்தி சித்தி பரபோகமும் தரும் நிலம் அத்தனை பொன்னை நின் மூடர்க்கு ஈந்தால் பலமும் அற்றே பர போகமும் குன்றுமே.
கண்டு இருந்து ஆர் உயிர் உண்டிடும் காலனைக் கொண்டு இருந்து ஆர் உயிர் கொள்ளும் குணத்தனை நன்று உணர்ந்தார்க்கு அருள் செய்திடும் நாதனைச் சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே.
கை விட்டிலேன் கருவாகிய காலத்து மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன் பொய் விட்டு நானே புரிசடையான் அடி நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே.
ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர் நந்தி காட்டத்துக் கண்டவன் ஏவன செய்யும் இளம் கிளையோனே.