பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எம்பெருமான் இறைவா முறையோ என்று வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல அம் பவள மேனி அறுமுகன் போய் அவர் தம் பகை கொல் என்ற தற்பரன் தானே.
அண்ட மொடு எண்திசை தாங்கும் அதோ முகம் கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர் வெண் தலை மாலை விரிசடை யோற்கே.
செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப் பொய்யே உரைத்துப் புகழும் மனிதர்கள் மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன் மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே.
நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும் முந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும் அந்தி இறைவன் அதோ முகம் ஆமே.
அதோ முகம் கீழ் அண்டம் ஆன புராணன் அதோ முகத் தன்னொடும் எங்கும் முயலும் சதோ முகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும் அதோ முகன் ஊழித் தலைவனும் ஆமே.
அதோ முகம் மா மலர் ஆயது கேளும் அதோ முகத்தால் ஒரு நூறாய் விரிந்து அதோ முகம் ஆகிய அந்தம் இல் சத்தி அதோ முகம் ஆகி அமர்ந்து இருந்தானே.