பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எழுந்து நீர் பெய்யினும் எட்டுத் திசையும் செழும் தண் நியமங்கள் செய்மின் என்று அண்ணல் கொழும் தண் பவளக் குளிர் சடை யோடே அழுந்திய நால்வருக்கு அருள் புரிந்தானே.
கொல்லான் பொய் கூறான் களவு இலான் எண் குணன் நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம் இல்லான் நியமத்து இடையில் நின்றானே.