பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல் அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல் தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி அளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.
அது இது ஆதிப் பரம் என்று அகல்வர் இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை விதிவழியே சென்று வேந்தனை நாடு மது இது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.
அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்ப வானவர் தேவனை நாள்தோறும் வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே.
அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழக் கண் அவன் என்று கருதும் அவர்கட்குப் பண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே.
வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும் பாசிக் குளத்தில் வீழ் கல்லா மனம் பார்க்கின் மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை நேசத்து இருந்த நினைவு அறியாரே.
எவ்விடத்தும் பணி இன்மை கண்டு உள்ளவர் எவ்விடத்தும் பணி ஈசன் பணி என்றே அவ்விடத்து ஐங்கருமத்தால் அறிதலால் உவ்விடத்தோருக்கு ஓர் உபாயம் இல்லையே.