பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினர் ஆய் முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவர்ஆம் முனிவர்.
தெரிந்து உணரின் முப் போதும் செல் காலம் நிகழ் காலம் வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன; அப் பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ.
நாரணற்கும் நான் முகற்கும் அறிய ஒண்ண நாதனை எம் பெருமானை ஞானம் ஆன ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப் பூரணத்தால் முழு நீறு பூசி வாழும