திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நாரணற்கும் நான் முகற்கும் அறிய ஒண்ண
நாதனை எம் பெருமானை ஞானம் ஆன
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும
அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள
கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும