பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தரிக்கிலேன் காய வாழ்க்கை; சங்கரா, போற்றி! வான விருத்தனே, போற்றி! எங்கள் விடலையே, போற்றி! ஒப்பு இல் ஒருத்தனே, போற்றி! உம்பர் தம்பிரான், போற்றி! தில்லை நிருத்தனே, போற்றி! எங்கள் நின்மலா, போற்றி! போற்றி!
போற்றி! ஓம் நமச்சிவாய! புயங்கனே, மயங்குகின்றேன்; போற்றி! ஓம் நமச்சிவாய! புகல் இடம் பிறிது ஒன்று இல்லை; போற்றி! ஓம் நமச்சிவாய! புறம் எனைப் போக்கல், கண்டாய்; போற்றி! ஓம் நமச்சிவாய! சய! சய! போற்றி! போற்றி!
போற்றி! என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் போற்றி! நின் பாதம் போற்றி! நாதனே, போற்றி! போற்றி! போற்றி! நின் கருணை வெள்ளப் புது மது; புவனம், நீர், தீ, காற்று, இயமானன், வானம், இரு சுடர், கடவுளானே!
கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி! விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி! உடல் இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி! சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி!
சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண் இலேன்; போற்றி! கோலப் பொங்கு அரா அல்குல், செவ் வாய், வெள் நகை, கரிய வாள் கண், மங்கை ஓர் பங்க, போற்றி! மால் விடை ஊர்தி, போற்றி! இங்கு, இவ் வாழ்வு ஆற்றகில்லேன்; எம்பிரான்! இழித்திட்டேனே.
இழித்தனன் என்னை யானே; எம்பிரான், போற்றி! போற்றி! பழித்திலேன் உன்னை; என்னை ஆளுடைப் பாதம் போற்றி! பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை; போற்றி! ஒழித்திடு இவ் வாழ்வு; போற்றி! உம்பர் நாட்டு எம்பிரானே!
எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி! கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள் நீற, போற்றி! செம் பிரான், போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி! உம்பராய், போற்றி! என்னை ஆளுடை ஒருவ, போற்றி!
ஒருவனே போற்றி! ஒப்பு இல் அப்பனே, போற்றி! வானோர் குருவனே, போற்றி! எங்கள் கோமளக் கொழுந்து, போற்றி! வருக என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி! தருக நின் பாதம், போற்றி! தமியனேன் தனிமை தீர்த்தே.
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப, போற்றி! பேர்ந்தும், என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை, போற்றி! வார்ந்த நஞ்சு அயின்று, வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல், போற்றி! ஆர்ந்த நின் பாதம், நாயேற்கு அருளிட வேண்டும், போற்றி!
போற்றி! இப் புவனம், நீர், தீ, காலொடு, வானம் ஆனாய்; போற்றி! எவ் உயிர்க்கும் தோற்றம் ஆகி, நீ, தோற்றம் இல்லாய்; போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆய், ஈறு இன்மை ஆனாய்; போற்றி! ஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே.