வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்; வளர்
சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்;
கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்;
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்;
இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்;
எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும்-பொழில்
திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.