பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
குழை கொள் காதினர், கோவண ஆடையர், உழையர்தாம்-கடவூரின் மயானத்தார்; பழைய தம் அடியார் செய்யும் பாவமும் பிழையும் தீர்ப்பர், பெருமான் அடிகளே.
உன்னி வானவர் ஓதிய சிந்தையில் கன்னல், தேன் கடவூரின் மயானத்தார்; தன்னை நோக்கித் தொழுது எழுவார்க்கு எலாம் பின்னைழு என்னார், பெருமான் அடிகளே.
சூலம் ஏந்துவர், தோல் உடை ஆடையர், ஆலம் உண்டு அமுதே மிகத் தேக்குவர், காலகாலர்-கடவூர் மயானத்தார்; மாலை மார்பர், பெருமான் அடிகளே.
இறைவனார், இமையோர் தொழு பைங்கழல் மறவனார்-கடவூரின் மயானத்தார்; அறவனார், அடியார் அடியார் தங்கள் பிறவி தீர்ப்பர், பெருமான் அடிகளே.
கத்து காளி கதம் தணிவித்தவர், மத்தர்தாம்-கடவூரின் மயானத்தார்; ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார், ஒரு பித்தர்காணும், பெருமான் அடிகளே.
எரி கொள் மேனி இளம்பிறை வைத்தவர், கரியர்தாம்-கடவூரின் மயானத்தார்; அரியர், அண்டத்து உளோர் அயன் மாலுக்கும்; பெரியர்காணும், பெருமான் அடிகளே.
அணங்கு பாகத்தர், ஆரண நால்மறை கணங்கள் சேர் கடவூரின் மயானத்தார்; வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்கு உறும் பிணம் கொள் காடர் - பெருமான் அடிகளே.
அரவு கையினர், ஆதி புராணனார்- மரவு சேர் கடவூரின் மயானத்தார்; பரவுவார் இடர் தீர்ப்பர், பணி கொள்வர், பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.