பூண் அலாப் பூணானை, பூசாச் சாந்தம்
உடையானை, முடை நாறும் புன் கலத்தில்
ஊண் அலா ஊணானை, ஒருவர் காணா
உத்தமனை, ஒளி திகழும் மேனியானை,
சேண் உலாம் செழும் பவளக்குன்று ஒப்பானை,
திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நீண் உலாம் மலர்க் கழனி நீடூரானை,-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.