கலைஞானம் கல்லாமே கற்பித்தானை, கடு நரகம்
சாராமே காப்பான் தன்னை,
பல ஆய வேடங்கள் தானே ஆகி,
பணிவார்கட்கு அங்கு அங்கே பற்று ஆனானை;
சிலையால் புரம் எரித்த தீஆடி(ய்)யை, திருப்
புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிலை ஆர் மணி மாட நீடூரானை,-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.