நோக்காதே எவ் அளவும் நோக்கினானை,
நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை,
ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை,
அணுகாதார் அவர் தம்மை அணுகாதானை,
தேக்காதே தெண்கடல் நஞ்சு உண்டான்
தன்னை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை,-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.