கொடி மாட நீள் தெருவு கூடல், கோட்டூர்,
கொடுங்கோளூர், தண் வளவி கண்டியூரும்,
நடம் ஆடும் நல் மருகல், வைகி; நாளும் நலம்
ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக;
படு மாலை வண்டு அறையும் பழனம், பாசூர்,
பழையாறும், பாற்குளமும், கைவிட்டு, இந் நாள்
பொடி ஏறும் மேனியராய்ப் பூதம் சூழ, “புறம்பயம்
நம் ஊர்” என்று போயினாரே!