நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி,
நிரைவளையார் பலி பெய்ய நிறையும் கொண்டு,
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டி(ய்)யும்
குடமூக்கில் அங்கு ஒழிய, “குளிர் தண் பொய்கை
நல்லாடை, நல்லூரே, தவிரேன்” என்று நறையூரில்-
தாமும் தவிர்வார் போல,
பொல்லாத வேடத்தர், பூதம் சூழ,
“புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!.