திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி,-பனி
முகில் போல் மேனிப் பவந்த நாதர்-
நெல் மலிந்த நெய்த்தானம், சோற்றுத்துறை,
நியமம், துருத்தியும், நீடூர், பாச்சில்,
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம், கடல்
நாகைக்காரோணம், கைவிட்டு, இந் நாள்
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம்
“புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!

பொருள்

குரலிசை
காணொளி