பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஆறாம் தந்திரம் / அவ வேடம்
வ.எண் பாடல்
1

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவன் அவன் தாள் களே.

2

ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டு இடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மானம் நலம் கெடும் வையகம் பஞ்சம் ஆம்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

3

இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள
நன் செயல் புன் செயலால் அந்த நாட்டிற்கு ஆம்
என்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில்
மன் பதை செப்பம் செயின் வையம் வாழுமே.

4

இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த
வழி குலத்தோர் வேடம் பூண்பர்தே ஆகப்
பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார்
கழி குலத்தோர்கள் களையப் பட்டோரே.

5

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகார் ஏல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.

6

பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சைகைக் கொள்வர்
பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும்
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே.