பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நால் ஏழு மாறவே நண்ணிய முத்திரை பால் ஆன மோன மொழியில் பதிவித்து மேல் ஆன நந்தி திருவடி மீது உய்யக் கோலா கலம் கெட்டுக் கூடு நல் முத்தியே.
துரியம் கண் மூன்றும் சொருகின் ஆகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே.
சாம்பவி நந்தி தன் அருள் பார்வை ஆம் ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி நாம் பயில் நாதன் மெய்ஞ் ஞான முத்திரையே.
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால் ஏனைச் சிவம் ஆம் சொரூபம் மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.
வாக்கும் மனமும் இரண்டு மவுனம் ஆம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கை ஆம் வாக்கும் மனமும் மவுனமும் ஆம் சுத்தரே ஆக்கும் அச் சுத்தத்தை யார் அறிவார்களே.
யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தி ஆம் ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்கால் ஆகத் தகு வேத கேசரி சாம்பவி யோகத்துக் கேசரி யோக முத்திரையே.
யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை போகி தன் புத்தி புருடார்த்த நல்நெறி ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே.
துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கம் ஆம் அவா அறு ஈர் ஐ வகை அங்கம் ஆறும் தவா அறு வேதாந்த சித்தாந்தத் தன்மை நவா அகமோடு உன்ன நல் சுத்த சைவமே.
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை கானிக்கு முத்திரை கண்ட சமயமே.
தூ நெறி கண்ட சுவடு நடு எழும் பூ நெறி கண்டது பொன் அகம் ஆய் நிற்கும் மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி நீ நெறி கண்டுள நின் மலன் ஆமே.