பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அஞ்சில் அமுதும் ஓர் ஏழின் கண் ஆனந்த முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சமே நின்று வைத்திடில் காயம் ஆம் கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.
புருடன் உடனே பொருந்திய சித்தம் அருவ மொடு ஆறும் அதீதத் துரியம் விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும் அரிய பதினொன்றும் ஆம் அவ் அவத்தையே.
காட்டும் பதினொன்றும் கை கலந்தால் உடல் நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை ஆட்டம் செய்யாத அது விதியே நினை ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே.