பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சீவன் தன் முத்தி அதீதம் பரமுத்தி ஓ உபசாந்தம் சிவ முத்தி ஆனந்த மூவயின் முச் சொரூப முத்தி முப்பாலது ஆய் ஓ உறு தாரத்தில் உள்ளு நாதாந்தமே.
ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும் ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும் ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே.
சிவம் ஆகி மும்மல முக்குணம் செற்றுத் தவம் ஆன மும் முத்தி தத்துவத்து அயிக்கியத்து உவம் ஆகிய நெறி சோகம் என்போர்க்குச் சிவம் ஆம் அமலன் சிறந்தனன் தானே.
சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுக ஆனந்த சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும் பெத்தம் அறுத்த பெரும் பெருமானே.