பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால் உண்டு என்ற சத்தி சதா சிவத்து உச்சி மேல் கண்டம் கரியான் கருணை திரு உருக் கொண்டு அங்கு உமை காணக் கூத்து உகந்தானே.
கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடி உள் நாடும் திடம் உற்று எழும் தேவ தாரு ஆம் தில்லை வடம் உற்றமாவனம் மன்னவன் தானே.
பரமாண்டத்து ஊடே பரா சத்தி பாதம் பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன் பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம் பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே.
அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில் தங்கியது ஒந்தி எனும் தாள ஒத்தினில் சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல் பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே.
ஆனத்து ஆடிப் பின் நவக் கூத்து ஆடிக் கானத்து ஆடிக் கருத்தில் தரித்து ஆடி மூனச் சுழுனையுள் ஆடி முடிவு இல்லா ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.
சத்திகள் ஐந்தும் சிவ பேதம் தான் ஐந்தும் முத்திகள் எட்டும் முதல் ஆம் பதம் எட்டும் சித்திகள் எட்டும் சிவ பதம் தான் எட்டும் சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே.
மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும் தேகங்கள் ஏழும் சிவ பாற் கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி அடிக் கீழ் அடங்குமே.