பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள் உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர் கற்று இருந்தார் வழி உற்று இருந்தார் அவர் பெற்று இருந்தார் அன்றி யார் பெறும் பேறே.
ஓர் எழுத்து ஒரு பொருள் உணரக் கூறிய சீர் எழுத்தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்து அங்கு ஓர் உகம் வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதா நந்தி ஆணையே.
மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர் சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர் நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறு உரு வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
ஈசன் அடியார் இதயம் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும் நாசம் அது ஆகுமே நந் நந்தி ஆணையே.
சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய் வரின் நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு பல் மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே.
கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும் கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்கத் தான் அறக் கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே.