பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும் தெற்றிக் கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள் வற்றாது ஒழிவது மாகமை ஆமே.
ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர் சேனை வளைந்து திசை தொறும் கைதொழ ஊனை விளைத்திடும் உம்பர் தம் ஆதியை ஏனை விளைந்து அருள் எட்டலும் ஆமே.
வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும் பல்வகை யாலும் பயிற்றிப் பதம் செய்யும் கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு எல்லை இல்லாத இலயம் உண்டாமே.