பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கண்டுகண்டு உள்ளே கருத்து உற வாங்கிடில் கொண்டு கொண்டு உள்ளே குணம் பல காணலாம் பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே.
நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம் தாபிக்கு மந்திரம் தன்னை அறிகிலர் தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின் கூவிக் கொண்டு ஈசன் குடி இருந்தானே.
மூலத்து இருவிரல் மேலுக்கு முன் நின்ற பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்ற கோலித்த குண்டலி உள் எழும் செம் சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே.
நாசிக்கு அதோ முகம் பன்னிரண்டு அங்குலம் நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மா சித்த மா யோகம் வந்து தலைப் பெய்தும் தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லை ஆமே
சோதி இரேகைச் சுடர் ஒளி தோன்றிடில் கோது இல் பரானந்தம் என்றே குறிக் கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால் ஓதுவது உன் உடல் உன் மத்தம் ஆமே.
மூலத் துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு காலத்தை வெல்லும் கருத்து இது தானே.
எரு இடும் வாசற்கு இருவிரல் மேலே கரு இடும் வாசற்கு இருவிரல் கீழே உரு இடும் சோதியை உள்க வல்லார்க்குக் கரு இடும் சோதி கலந்து நின்றானே.
ஒருக்கால் உபாதியை ஒண் சோதி தன்னைப் பிரித்து உணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால் பிரத்தி ஆகாரப் பெருமையை அது ஆமே.
புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம் திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால் உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே புறப்பட்டுப் போகான் பெரும் தகையானே.