பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து இணையார் இணைக் குழை ஈர் அணை முத்திரை குணம் ஆர் இணைக் கண்ட மாலையும் குன்றாது அணைவாம் சரியை கிரியை யினார்க்கே.
காதுப் பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து ஓதும் திரு மேனியுள் கட்டு இரண்டுடன் சோதனை செய்து துவா தெச மார்க்கர் ஆய் ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே.
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும் பொருள் கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டம் ஆம் கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே.
ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன் மோன திசையும் முழு எண் எண் சித்தியும் ஏனை நிலமும் எழுதா மறை ஈறும் கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.