திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

"முத்தியர், மூப்பு இலர், ஆப்பின் உள்ளார், முக்கணர், தக்கன் தன்
வேள்வி சாடும்
அத்தியர்" என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு
இருந்த ஊர் ஆம்
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும்
மதுப் பாய, கோயில்
பத்திமைப் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

பொருள்

குரலிசை
காணொளி