திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாள் தடம் கண் மட மங்கை நல்லீர்! வரி வளை ஆர்ப்ப, வண் கொங்கை பொங்க,
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க, சோத்தம், பிரான்! என்று சொல்லிச் சொல்லி,
நாள் கொண்ட நாள் மலர்ப் பாதம் காட்டி, நாயின் கடைப்பட்ட நம்மை, இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

பொருள்

குரலிசை
காணொளி