திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான், கீழ் மேல், அயனும் மாலும்,
அகழப் பறந்தும், காணமாட்டா அம்மான், இம் மா நிலம் முழுதும்
நிகழப் பணி கொண்டு, என்னை ஆட்கொண்டு, ஆ! ஆ! என்ற நீர்மை எல்லாம்
புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

பொருள்

குரலிசை
காணொளி