பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பிட்டு நேர்பட, மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே! சட்ட நேர்பட, வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்; சிட்டனே! சிவலோகனே! சிறு நாயினும் கடை ஆய வெம் கட்டனேனையும் ஆட்கொள்வான், வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!