திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு,
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்;
உய்ஞ்சேன் நான்; உடையானே, அடியேனை வருக என்று,
அஞ்சேல் என்று, அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

பொருள்

குரலிசை
காணொளி