பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
உரிமை உடைய அடியார்கள் உள் உற உள்க வல்லார்கட்கு அருமை உடையன காட்டி, அருள் செயும் ஆதிமுதல்வர்; கருமை உடை நெடுமாலும், கடிமலர் அண்ணலும், காணாப் பெருமை உடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.