பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர், மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ! பூணல் வெள் எலும்பினான், பொன்திகழ் சடை முடிக் கோணல் வெண்பிறையினான், கோடிகாவு சேர்மினே!