திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

தாம் முகம் ஆக்கிய அசுரர்தம் பதி
வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும்,
பூமகன், அறிகிலா பூந்தராய் நகர்க்
கோமகன், எழில் பெறும் அரிவை கூறரே

பொருள்

குரலிசை
காணொளி