கொல்லை விடை ஏறு உடைய கோவணவன், நா அணவும்
மாலை
ஒல்லை உடையான், அடையலார் அரணம் ஒள் அழல்
விளைத்த
வில்லை உடையான், மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து, அருள் செய்
தோணிபுரம் ஆமே.