திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்;
“எந்தையே! ஏகமூர்த்தி!” என்று நின்று ஏத்தமாட்டேன்;
பந்தம் ஆய், வீடும் ஆகி, பரம்பரம் ஆகி, நின்று
சிந்தையுள்-தேறல் போலும்-திருச் சோற்றுத் துறையனாரே.

பொருள்

குரலிசை
காணொளி