பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று, கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்! பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்; எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே!